தேவையான பொருட்கள் :
கீரை | 1 கட்டு |
சீரகம்
| 2 டேபிள் ஸ்பூன் |
பச்சை மிளகாய்
| 2 |
உப்பு
| தேவைக்கு
|
சின்ன வெங்காயம்
| ½ கப் |
தேங்காய் எண்ணை
| 2 டேபிள் ஸ்பூன் |
செய்முறை:
1. கீரையை சுத்தம் செய்து கழுவி நீரை வடிய வைக்கவும். [மசியலுக்கு முருங்கை கீரை சேர்க்க வேண்டாம்]
2. வெங்காயத்தை தோல் உரித்து மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. கடாயில் அல்லது மண் சட்டியில் ½ கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
4. சிறிது நீரம் ஆறியவுடன் பருப்பு மத்து அல்லது மிக்ஸ்யின் உதவியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
5. கடைசியாக சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து ஒரே ஒரு சுற்று கடையவும்.
6. கடைசியாக தேங்காய் எண்ணைசேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
இது சூடான சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
4 comments:
nice receipe..
Ennaku migavum pithathu....nanum eppadi than seiven....puthandu valthukkal
Simple and healthy.
எளிமையான குறிப்பு.
பகிர்வுக்கு நன்றி குறிஞ்சி!
Post a Comment