தேவையான பொருட்கள்:
| ஆரஞ்சு | 2 |
| தேன் | 2 டேபிள் ஸ்பூன் |
| சர்க்கரை | 1 டேபிள் ஸ்பூன் |
| ஐஸ் கட்டிகள் | 5 |
செய்முறை :
1. ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து சுளைகளை தனியாக எடுக்கவும்.
2. சுளைகளில் உள்ள விதைகளை நீக்கவும்.
3. மிக்ஸ்யில் விதைகளை நீக்கிய சுளைகள், தேன், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.
4. பின்பு ஜல்லடையில் வடித்து விட்டு ஜில்என்று பரிமாறவும்.