Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Wednesday, January 12, 2011
நான் கேட்டவை - 2 வெள்ளைப்பூக்கள்
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே , தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்
காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும்
கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
எங்கு சிறு குழந்தை
தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ வெள்ளை நிலவே
எங்கு மனித இனம்
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளை குயிலே
Labels:
A.R. ரகுமான்,
கேட்டவை,
பாடல்,
பாடல் வரிகள்,
ரசித்தது
Tuesday, January 11, 2011
நான் கேட்டவை - 1 - என்னமா தோழி....
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். காலைப்பனி படத்தில் இருந்து என்னம்மா தோழி பாடல் . குழந்தை பொம்மையை தொலைத்துவிட்டு தேடுவது போன்ற பாடல் . பாடல் இசை மிகவும் நன்றாக இருக்கின்றது.
என்னம்மா தோழி பாடல் வரிகள் - படம் : காலைப்பனி
என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்
தல வாரி பின்னி பூக்கள்
வைத்து புது சட்டை போட்டு விட்டு
அய்பசி மாசம் காவேரி ஸ்நானம்
பொம்மைய வாங்கி வந்தேன்
தாலாட்டு நான் பாட கண் மூட மாட்டியோ
மறைந்த போதும் மனதில் என்னும்
மலரோடு பேசும் மழைலை கீதம்
என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்
மரணம் இல்லா வரம் கேட்டு மறு
ஜென்மம் ஒன்று இருந்தால் மாறி விடும்
முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கை விரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணமல் களை இழக்கும்
என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்
Subscribe to:
Posts (Atom)