Thursday, January 6, 2011
ஜோக்ஸ் - 2
மாணவன் : எப்படி சார் சொன்னீங்க ?
டீச்சர் : வரலாறு பேப்பர்ல "கி . மு " ன்னு எழுதறதுக்கு பதில் "ஈ . மு " ன்னு எழுதி இருக்கியே"
Wednesday, January 5, 2011
கீரை மசியல் / கடைதல்
தேவையான பொருட்கள் :
| கீரை | 1 கட்டு |
| சீரகம்
| 2 டேபிள் ஸ்பூன் |
| பச்சை மிளகாய்
| 2 |
| உப்பு
| தேவைக்கு
|
| சின்ன வெங்காயம்
| ½ கப் |
| தேங்காய் எண்ணை
| 2 டேபிள் ஸ்பூன் |
செய்முறை:
1. கீரையை சுத்தம் செய்து கழுவி நீரை வடிய வைக்கவும். [மசியலுக்கு முருங்கை கீரை சேர்க்க வேண்டாம்]
2. வெங்காயத்தை தோல் உரித்து மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. கடாயில் அல்லது மண் சட்டியில் ½ கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
4. சிறிது நீரம் ஆறியவுடன் பருப்பு மத்து அல்லது மிக்ஸ்யின் உதவியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
5. கடைசியாக சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து ஒரே ஒரு சுற்று கடையவும்.
6. கடைசியாக தேங்காய் எண்ணைசேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
இது சூடான சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
ஜோக்ஸ் - 1
எஸ் எம் எஸ் ல் வந்தது .....
பிச்சைக்காரன்: அம்மா தாயே பசிக்குது எதாவது கொடுங்க, நான் ஊமை.
அம்மா : பக்கத்துக்கு வீட்டுல போய் கேளுப்பா எனக்கு காது கேக்காது.
ஹ ஹ ஹா .......
Tuesday, January 4, 2011
தினமலர் கண்காட்சி - 2010
Monday, January 3, 2011
சென்னையில் வானவில்
2. கேரட் - தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :
| கேரட் | 4 |
| தக்காளி | 2 |
| துருவிய தேங்காய் | 2 டேபிள் ஸ்பூன் |
| வெங்காயம் | 1 |
| பூண்டு | 4 பல் |
| பச்சை மிளகாய் | 2 |
| பிரிஞ்சி இலை | 1 |
| எண்ணை | 1 டேபிள் ஸ்பூன் |
| உப்பு | தேவைக்கு |
செய்முறை :
1. கேரட்டை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக அல்லது துருவி வைக்கவும்
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. பிரஷர் குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் பூண்டு, வெங்காயம், பிரிஞ்சி இலை, கேரட் துண்டுகள், துருவிய தேங்காய், தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
5. பின்பு 2 கப் நீர் சேர்த்து ஹைல் 2 விசில் வரும் வரை வேக விடவும்.
6. ஆறிய பின் நீரை வடித்து விட்டு காய்களை மிக்ஸ்யில் போட்டு மையாக அரைக்கவும். அதனுடன் வடிதுவைதுள்ள நீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும்வரை சூடு செய்யவும்.
7. பரிமாறும் போது மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.
Sunday, January 2, 2011
1. அவல் இனிப்பு பொங்கல்
தே. பொருட்கள்
| அவல் | 2 கப் |
| வெல்லம்
| 1 கப் |
| தண்ணீர்
| ½ கப் |
| நெய்
| 2 டேபிள்ஸ்பூன் |
| முந்திரி
| 10 |
| கிஸ்மிஸ்
| 10 |
| ஏலக்காய்
| 3 |
| துருவிய தேங்காய்
| 3 டேபிள்ஸ்பூன் |
செய்முறை:
1. அவலை சுத்தம் செய்து 5 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.
பின்பு வடிதட்டில் போட்டு 15 நிமிடம் வைத்துவிடவும். இதானால் அவலை தொட்டால் மிருதுவாக இருக்கும் ஆனால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. 15 நிமிடத்திற்கு பின் 3 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
2. அவலில் நீர் வடிவதற்குள் வெல்லத்தை பொடியாக்கி 1/2 கப் நீர் ஊற்றி நன்கு கரையும் வரை அடுப்பில் வைக்கவும். பின்பு வடிகட்டி (நைலான் வடிகட்டி பயன்படுத்த வேண்டாம் ) கொண்டு வடிகட்டி தனியாக வைக்கவும் .
3. கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும்.
4. அவல் நன்கு உலர்ந்த பின் வெல்லப் பாகை சிறுது சிறிதாக ஊற்றி மெதுவாக கலக்கவும்.வருத்த முந்திரி மற்றும் திராட்சை கொண்டு அலங்காரம் செய்யவும்.
இது மிகவும் சத்தான உணவு. இதில் கொழுப்பு சத்தே கிடையாது.உடல் இளைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .