தேவையான பொருட்கள்:
தக்காளி | 1 கிலோ |
நல்லெண்ணெய் | 5 டேபிள் ஸ்பூன் |
கடுகு | 1 டேபிள் ஸ்பூன் |
க.வேப்பிலை | 2 கொத்து |
வெந்தயம் | 1 டீ ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன் |
பெருங்காயம் | 1 டீ ஸ்பூன் |
சிவப்பு மிளகாய் தூள் | 2 டேபிள் ஸ்பூன் |
சாம்பர் பொடி | 1 டேபிள் ஸ்பூன் |
உப்பு | தேவைக்கு |
செய்முறை:
1. 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறிய பின் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளியை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு மைய அரைத்து வைக்கவும்.
3. அடி கனமான வாணலியில் எண்ணையை காய வைத்து, கடுகு போட்டு பொரிந்தவுடன் க.வேப்பிலை, வெந்தயம் ம்ற்றும் பெருங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
4. அதன் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
5. தண்ணீர் நன்கு வ்ற்றி, எண்ணை பிரிந்து வரும்வரை வதக்கவும். அடுப்பை சிம்ல் வைத்துச் செய்யவும்.
6. ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாது.
தயிர் சாதம் மற்றும் ரொட்டி வகைகளுக்கு சூப்பராக இருக்கு.
14 comments:
நிஜமாகவே படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிரது. இப்பயெல்லாம் நம்ம பக்கம் வருவதில்லையே...
அருமை குறிஞ்சி.
பார்க்குபோதே ஆசை வருது.
இதுவரை ரெடிமேடாக வாங்குவதுண்டு. இனி, வீட்டிலேயே செய்து அசத்திரவேண்டியதுதான் :)
நாவில் நீர் ஊறுது...
கலர் அழகாய் இருக்கு.
நான் இந்த முறையில் தக்காளி சாதம் செய்வேன்.
பகிர்வுக்கு நன்றி.
Looks so wonderful and very nice to read in Tamil
Following your blog
குறிஞ்சி, இந்த புகைப்படம் நீங்கள் எடுத்ததா? ஊறுகாயின் சுவையை புகைப்படமே சொல்கிறது. அதனால் தான் கேட்டேன்.
தக்காளி ஊறுகாய் வாயில் எச்சில் ஊறச்செய்கிறது
தொக்குநல்லா இருக்குது குறிஞ்சி! உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கேன்,தொடருங்க! நன்றி!
http://mahikitchen.blogspot.com/2011/03/blog-post.html
ரொம்ப நல்லா இருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு
தக்காளி ஊறுகாய் அருமை!
பகிர்வுக்கு நன்றி.
உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: செவ்வாய் பெண்கள் சரமாக!
Post a Comment