Monday, February 28, 2011

இஞ்சி – மிளகு டீ


  
தேவையான பொருட்கள்:

இஞ்சி
1 இன்ச்
மிளகு
10
டீ  தூள்
1 டீ ஸ்பூன்
சர்க்கரை / கருப்பட்டி
1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. மிளகை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
3. பாத்திரத்தில் 11/2 கப் தண்ணீர், நறுக்கிய இஞ்சித் துண்டுகள் மற்றும் மிளகு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் 1 கப்பாக குறையும் வரை அடுப்பை சிம்ல் வைத்து கொதிக்கவிடவும். கண்டிப்பாக பாத்திரத்தை மூடி வைக்கவும்.
4. பிறகு டீ தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
5. வடிகட்டி, கருப்பட்டி சேர்த்து பருகவும்.

   இது சளி, இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மிகவும் நல்லது.


Sunday, February 27, 2011

ஒவையார் அருளிய ஆத்திசூடி - 75 - 109


76. நோய்க்கு இடங்கொடேல்.
    நோய் வரும் முறையில் நடந்து கொள்ளாதே.

77. பழிப்பன பகரேல்.
    பழியுண்டாக்கும் சொற்களைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்.
    பாம்பு போன்ற தீயவர்களுடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்.
    குற்றம் உண்டாக்குமாறு பேசாதே.

80. பீடு பெற நில்.
    பெருமை உண்டாக்கும் முறையில் நடந்துகொள்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
    பிறரால் புகழ்பெறும் சான்றோர்களை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க.

82. பூமி திருத்தியுண்.
    நிலத்தை நன்றாகச் செப்பம் செய்து விளைச்சல் உண்டாக்கி உண்க.

83. பெரியாரைத் துணைக்கொள்.
    அறிவிற் சிறந்த பெரியவர்களைத் துணையாகக்கொண்டு வாழ்க.

84. பேதமை அகற்று.
    அறியாமையை நீக்கிக் கொள்க.

85. பையலோடு இணங்கேல்.
    தீயவர்களோடு சேராதே.

86. பொருள்தனைப் போற்றி வாழ்.
    அதிகம் செலவு செய்யாமல் உள்ள பொருளைப் பாதுகாத்து வாழ்க.

87. போர்த்தொழில் புரியேல்.
    வேண்டாத சண்டைகளை மேற்கொள்ளாதே.

88. மனந்தடுமாறேல்.
    மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
    பகைவன் வருவதற்கு வழி வகுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்.
    அதிகமாகப் பேசாதே.

91. மீதூண் விரும்பேல்.
    அதிகமாகப் பேசாதே.

92. முனை முகத்து நில்லேல்.
    கலகம் ஏற்படும் இடத்தில் நிற்காதே.

93. மூர்க்கரோடு இண்ங்கேல்.
    மூர்க்கக்குணம் உடையவரோடு பழகாதே.

94. மெல்லின்ல்லாள் தோள்சேர்.
    மென்மைகுணம் உடைய நல்ல மனைவி உடன் சேர்ந்து வாழ்வாயாக.

95. மேன்மக்கள் சொற்கேள்.
    உயர்ந்தவர் சொற்படி நடந்து கொள்.

96. மைவிழியார் மனை அகல்.
    புற அழகுடைய பரத்தையர் வீட்டை நீங்கி வாழ்க.

97. மொழிவது அறமொழி.
    சொல்வதைச் சந்தேகம் இல்லாமல் தெளிவாகச்சொல்.

98. மோகத்தை முனி.
    வீண் ஆசைகளை வெறுப்பாயாக.

99. வல்லமை பேசேல்.
    உன்னுடைய ஆற்றலை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாதுமுற் கூறேல்.
     வீண் வாதம் செய்யாதே.

101. வித்தை விரும்பு.
     செய்யும் தொழிலை விரும்பிச் செய்.

102. வீடுபெற நில்.
     பேரின்பம் உண்டாக்கும் முறையில் நடந்துகொள்.

103. உத்தமனாய் இரு.
     நல்லவனாக வாழ்க.

104. ஊருடன் கூடி வாழ்.
     ஊர் மக்களோடு ஒத்து வாழ்க.

105. வெட்டெனப் பேசேல்.
     வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் முறையில் பேசாதே.

106. வேண்டி வினை செயேல்.
     வேண்டும் என்றே தீயகாரியங்களைச் செய்யாதே.

107. வைகறைத் துயில் எழு.
     பொழுது விடிவதற்கு முன்பே அதிகாலையில் தோக்கதிலிருந்து எழுந்திருப்பாயாக.

108. ஒன்னாரைத் தேறேல்.
           பகைவாரை நம்பாதே.

109. ஓரஞ் சொல்லேல்.
     வழக்குகளில் ஒருபக்கமாகப் பேசாதே.
           
ஆத்திசூடி 1 முதல் 25 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆத்திசூடி 26 முதல் 50 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆத்திசூடி 51 முதல் 75 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
               முற்றும்.

Thursday, February 17, 2011

ஒவையார் அருளிய ஆத்திசூடி - 51 - 7551. சேரிடம் அறிந்து சேர்.
    நல்ல இனத்தவருடன் நன்றாக தெரிந்து கொண்டு சேர்ந்து வாழ்க.

52. சையெனத் திரியேல்.
    பிறர் இகழுமாறு திரியாதே.

53. சொற்சோர்வு படேல்.
    பேசும் போது சொற்குற்றம் உண்டாகும் நிலையில் பேசாதே.

54. சோம்பித் திரியேல்.
    சோம்பலாகக் காரியம் செய்யாதே.

55. தக்கோன் எனத்திரி.
    நல்லவன் எனக் கூறும்படி நடந்து கொள்.

56. தானமது விரும்பு.
    வசதியில்லாதவர்க்குத் தானம் கொடுக்க ஆசைப்படு.

57. திருமாலுக்கு அடிமை செய்.
    நாராயணனுக்குத் தொண்டனாகப் பணிசெய்க.

58. தீவினை அகற்று.
    தீமைபயக்கும் செயல்களை நீக்கு.

59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
    துன்பம் உண்டாகும்படி நடந்துகொள்ளாதே.

60. தூக்கி வினைசெய்.
    ஆராய்ந்து எல்லாக் காரியங்களையும் செய்க.

61. தெய்வம் இகழேல்.
    கடவுளைப் பழிக்காதே.

62. தேசத்தோடு ஒத்து வாழ்.
    உலக மக்களோடு ஒத்து வாழ்க.

63.  தையல் சொற்கேளேல்.
    புறத்தில் அழகுள்ளவர்கள் சொல்லும் சொற்களைக் கேளாதே.

64. தொன்மை மறவேல்.
    பழைய பெருமையை மறக்காதே.

65. தோற்பன தொடரேல்.
    தோல்வியுண்டாக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்யாதே.

66. நன்மை கடைப்பிடி
    நல்லனவற்றைக் கடைபிடித்து நடந்துகொள்.

67. நாடு ஒப்பன செய்.
    நாட்டுக்குப் பொருத்தமான செயல்களைச் செய்க.

68. நிலையிற் பிரியேல்.
    நல்ல நிலையிலிருந்து தாழ்ந்து விடாதே.

69. நீர் விளையாடேல்.
    ஆழமான நீர்னிலைகளில் விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்.
    நுண்மையான நோய்க்கிருமிகள் இருக்கும் உணவுப் பொருட்களை உண்ணாதே.

71. நூல் பல கல்.
    அறிவுதரும் நூல்கள் பலவற்றையும் கற்க.

72. நெற்பயிர் விளை.
    உணவுக்கு வேண்டிய நெற்பயிர்களை விளைவு செய்க.

73.  நேர்பட ஒழுகு.
    நேர்மையாக நடந்து கொள்.

74. நைவினை நணுகேல்.
    வருத்தம் தரும் செயல்களைச் செய்யாதே.

75. நொய்ய உரையேல்.
    பயனில்லதாவற்றைப் பேசாதே.
                                                  தொடரும்.....

ஆத்திசூடி 1 முதல் 25 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆத்திசூடி 26 முதல் 50 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.


Tuesday, February 15, 2011

ஜோக்ஸ் மெயில்

1) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…

என்ன கொடும சார் இது?….

---------------------------------------------------
2) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை….

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….

---------------------------------------------------

3) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….

இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

---------------------------------------------------

4) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

சீனாவுல தான் பிறந்தது…..

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY

---------------------------------------------------

5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..

நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் – 1: அப்புறம் பாக்கெட்‘ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….

---------------------------------------------------

Monday, February 14, 2011

கிளாஸ் பெய்ண்டிங் - 2

பூக் கோலம்


Friday, February 11, 2011

கிளாஸ் பெயிண்டிங் - 1