76. நோய்க்கு இடங்கொடேல்.
நோய் வரும் முறையில் நடந்து கொள்ளாதே.
77. பழிப்பன பகரேல்.
பழியுண்டாக்கும் சொற்களைப் பேசாதே.
78. பாம்பொடு பழகேல்.
பாம்பு போன்ற தீயவர்களுடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல்.
குற்றம் உண்டாக்குமாறு பேசாதே.
80. பீடு பெற நில்.
பெருமை உண்டாக்கும் முறையில் நடந்துகொள்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
பிறரால் புகழ்பெறும் சான்றோர்களை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க.
82. பூமி திருத்தியுண்.
நிலத்தை நன்றாகச் செப்பம் செய்து விளைச்சல் உண்டாக்கி உண்க.
83. பெரியாரைத் துணைக்கொள்.
அறிவிற் சிறந்த பெரியவர்களைத் துணையாகக்கொண்டு வாழ்க.
84. பேதமை அகற்று.
அறியாமையை நீக்கிக் கொள்க.
85. பையலோடு இணங்கேல்.
தீயவர்களோடு சேராதே.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
அதிகம் செலவு செய்யாமல் உள்ள பொருளைப் பாதுகாத்து வாழ்க.
87. போர்த்தொழில் புரியேல்.
வேண்டாத சண்டைகளை மேற்கொள்ளாதே.
88. மனந்தடுமாறேல்.
மனக்கலக்கம் அடையாதே.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
பகைவன் வருவதற்கு வழி வகுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல்.
அதிகமாகப் பேசாதே.
91. மீதூண் விரும்பேல்.
அதிகமாகப் பேசாதே.
92. முனை முகத்து நில்லேல்.
கலகம் ஏற்படும் இடத்தில் நிற்காதே.
93. மூர்க்கரோடு இண்ங்கேல்.
மூர்க்கக்குணம் உடையவரோடு பழகாதே.
94. மெல்லின்ல்லாள் தோள்சேர்.
மென்மைகுணம் உடைய நல்ல மனைவி உடன் சேர்ந்து வாழ்வாயாக.
95. மேன்மக்கள் சொற்கேள்.
உயர்ந்தவர் சொற்படி நடந்து கொள்.
96. மைவிழியார் மனை அகல்.
புற அழகுடைய பரத்தையர் வீட்டை நீங்கி வாழ்க.
97. மொழிவது அறமொழி.
சொல்வதைச் சந்தேகம் இல்லாமல் தெளிவாகச்சொல்.
98. மோகத்தை முனி.
வீண் ஆசைகளை வெறுப்பாயாக.
99. வல்லமை பேசேல்.
உன்னுடைய ஆற்றலை நீயே புகழ்ந்து பேசாதே.
100. வாதுமுற் கூறேல்.
வீண் வாதம் செய்யாதே.
101. வித்தை விரும்பு.
செய்யும் தொழிலை விரும்பிச் செய்.
102. வீடுபெற நில்.
பேரின்பம் உண்டாக்கும் முறையில் நடந்துகொள்.
103. உத்தமனாய் இரு.
நல்லவனாக வாழ்க.
104. ஊருடன் கூடி வாழ்.
ஊர் மக்களோடு ஒத்து வாழ்க.
105. வெட்டெனப் பேசேல்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் முறையில் பேசாதே.
106. வேண்டி வினை செயேல்.
வேண்டும் என்றே தீயகாரியங்களைச் செய்யாதே.
107. வைகறைத் துயில் எழு.
பொழுது விடிவதற்கு முன்பே அதிகாலையில் தோக்கதிலிருந்து எழுந்திருப்பாயாக.
108. ஒன்னாரைத் தேறேல்.
பகைவாரை நம்பாதே.
109. ஓரஞ் சொல்லேல்.
வழக்குகளில் ஒருபக்கமாகப் பேசாதே.
முற்றும்.
1 comment:
நாம் அழகாக மறந்து விட்ட பழங்கலைகளான நம் அவ்வை பாட்டி கற்பித்த ஆத்திசூடி இன்றைய இளைய தலைமுறைக்கு அழகாக படம் பிடித்து கட்டுகின்றீர் . உங்களின் பணி உண்மையில் பாராட்ட தக்கன போற்ற தக்கன
Post a Comment