Thursday, February 17, 2011

ஒவையார் அருளிய ஆத்திசூடி - 51 - 75



51. சேரிடம் அறிந்து சேர்.
    நல்ல இனத்தவருடன் நன்றாக தெரிந்து கொண்டு சேர்ந்து வாழ்க.

52. சையெனத் திரியேல்.
    பிறர் இகழுமாறு திரியாதே.

53. சொற்சோர்வு படேல்.
    பேசும் போது சொற்குற்றம் உண்டாகும் நிலையில் பேசாதே.

54. சோம்பித் திரியேல்.
    சோம்பலாகக் காரியம் செய்யாதே.

55. தக்கோன் எனத்திரி.
    நல்லவன் எனக் கூறும்படி நடந்து கொள்.

56. தானமது விரும்பு.
    வசதியில்லாதவர்க்குத் தானம் கொடுக்க ஆசைப்படு.

57. திருமாலுக்கு அடிமை செய்.
    நாராயணனுக்குத் தொண்டனாகப் பணிசெய்க.

58. தீவினை அகற்று.
    தீமைபயக்கும் செயல்களை நீக்கு.

59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
    துன்பம் உண்டாகும்படி நடந்துகொள்ளாதே.

60. தூக்கி வினைசெய்.
    ஆராய்ந்து எல்லாக் காரியங்களையும் செய்க.

61. தெய்வம் இகழேல்.
    கடவுளைப் பழிக்காதே.

62. தேசத்தோடு ஒத்து வாழ்.
    உலக மக்களோடு ஒத்து வாழ்க.

63.  தையல் சொற்கேளேல்.
    புறத்தில் அழகுள்ளவர்கள் சொல்லும் சொற்களைக் கேளாதே.

64. தொன்மை மறவேல்.
    பழைய பெருமையை மறக்காதே.

65. தோற்பன தொடரேல்.
    தோல்வியுண்டாக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்யாதே.

66. நன்மை கடைப்பிடி
    நல்லனவற்றைக் கடைபிடித்து நடந்துகொள்.

67. நாடு ஒப்பன செய்.
    நாட்டுக்குப் பொருத்தமான செயல்களைச் செய்க.

68. நிலையிற் பிரியேல்.
    நல்ல நிலையிலிருந்து தாழ்ந்து விடாதே.

69. நீர் விளையாடேல்.
    ஆழமான நீர்னிலைகளில் விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்.
    நுண்மையான நோய்க்கிருமிகள் இருக்கும் உணவுப் பொருட்களை உண்ணாதே.

71. நூல் பல கல்.
    அறிவுதரும் நூல்கள் பலவற்றையும் கற்க.

72. நெற்பயிர் விளை.
    உணவுக்கு வேண்டிய நெற்பயிர்களை விளைவு செய்க.

73.  நேர்பட ஒழுகு.
    நேர்மையாக நடந்து கொள்.

74. நைவினை நணுகேல்.
    வருத்தம் தரும் செயல்களைச் செய்யாதே.

75. நொய்ய உரையேல்.
    பயனில்லதாவற்றைப் பேசாதே.
                                                  தொடரும்.....

ஆத்திசூடி 1 முதல் 25 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆத்திசூடி 26 முதல் 50 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.


4 comments:

சக்தி கல்வி மையம் said...

விளக்கங்கள் அருமை.

ஞாஞளஙலாழன் said...

ஆச்சர்யமா இருக்கு. மேலும் வளர்க உங்கள் பணி.

சுந்தரா said...

விளக்கத்துடன் கொடுத்திருப்பது சிறப்பு.

பகிர்வுக்கு நன்றிகள் குறிஞ்சி!

vidhas said...

arumiyana villakam

Post a Comment