Thursday, December 29, 2011
ரங்கோலி கோலம் - மார்கழி ஸ்பெஷல்
Saturday, December 24, 2011
ரங்கோலி கோலம் - மார்கழி ஸ்பெஷல்
Friday, December 23, 2011
ரங்கோலி கோலம் - மார்கழி ஸ்பெஷல்
Monday, December 19, 2011
ரங்கோலி கோலம் - மார்கழி ஸ்பெஷல்
Saturday, December 17, 2011
ரங்கோலி கோலம் - மார்கழி ஸ்பெஷல்
Friday, December 16, 2011
Thursday, May 12, 2011
பானங்களின் இளவரசி
தேவையான பொருட்கள்:
சப்போட்டா | 4 |
பேரீச்சை | 2 |
தேங்காய் துருவல் | 2 டேபிள் ஸ்பூன் |
தேன் | 1 டேபிள் ஸ்பூன் |
ஏலக்காய்த் தூள் | 1/2 டீ ஸ்பூன் |
பனங்கற்கண்டு | 1 டேபிள் ஸ்பூன் |
ஐஸ் கட்டிகள் | 5 |
உப்பு | ஒரு சிட்டிகை |
செய்முறை:
அ) சப்போட்டா, பேரீச்சம் பழங்களில் இருந்து விதைகளை நீக்கவும்.
ஆ) அனைத்துப் பொருட்களையும் மிக்ஸில் போட்டு நுரைத்து வரும் வரை அரைக்கவும். தேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இ) டம்ளர்களில் ஊற்றி பருகவும்.
இதனை மல்லிகா பத்ரிநாத் அவர்களின் டிவி நிகழ்ச்சி பார்த்து தெரிந்து கொண்டேன்.
Wednesday, May 11, 2011
திராட்சை ஜீஸ்
தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை | 1 கப் |
தண்ணீர் | ½ கப் |
பனங்கற்கண்டு | 2 டேபிள் ஸ்பூன் |
ஐஸ் கட்டிகள் | 5 |
செய்முறை:
அ) அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அல்லது ஜூசரில் போட்டு 2-3 நிமிடங்கள் அடிக்கவும்.
ஆ) ஜுஸ் வடிகட்டியில் (துளைகள் டீ வடிகட்டியை விட பெரியதாக இருக்கும்) வடிகட்டவும்.
ஜூஸ் ரெடி. உடனே பரிமாறவும்.
Tuesday, May 10, 2011
வெள்ளரிக்காய் மோர்
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் | 1 |
மோர் | 1 கப் |
இஞ்சி | ½ சிறு துண்டு |
கொத்தமல்லி தழை (நறுக்கியது) | 1 டேபிள் ஸ்பூன் |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை:
அ) வெள்ளரிக்காயை சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆ) வெள்ளரிக்காயுடன், இஞ்சி, கொத்தமல்லி தழை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை(paste) போல அரைத்துக் கொள்ளவும்.
Monday, May 9, 2011
கோலம் - ஸ்டார் கோலம்
Labels:
7 புள்ளிக் கோலம்,
கோலம்,
நட்சத்திரக் கோலம்,
ஸ்டார் கோலம்
முலாம் பழ ஜுஸ் - (Muskmelon Juice)
தேவையான பொருட்கள்:
முலாம் பழ துண்டுகள் | 1 கப் |
சர்க்கரை | 2 டேபிள் ஸ்பூன் |
ஐஸ் கட்டிகள் | 5 |
தண்ணீர் | 1 கப் |
ஏலக்காய்த் தூள் | ¼ டீ ஸ்பூன் |
செய்முறை:
1. முலாம் பழத்தை இரண்டாக வெட்டி விதை மற்றும் தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
2. பின்பு முலாம் பழத் துண்டுகளுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து மிக்ஸில் அடித்து வடிகட்டி சில் என்று பரிமாறவும்.
Sunday, May 8, 2011
சார்ஜா மில்க் சேக் - (Sharjah Milkshake)
தேவையான பொருட்கள்:
காய்ச்சி ஆற வைத்த பால் | 1 கப் |
பாதாம் (அ) முந்திரி | 5 |
பூஸ்ட் | 2 டேபிள் ஸ்பூன் |
சர்க்கரை | 1 டேபிள் ஸ்பூன் |
வாழைப் பழம் | 1 |
வெண்ணிலா ஐஸ் கிரீம் | 2 டேபிள் ஸ்பூன் |
செய்முறை:
அ) 1 டேபிள் ஸ்பூன் பூஸ்ட் தவிர அனைத்தையும் ஒன்றாக மிக்சில் போட்டு நன்கு நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும்.
ஆ) இதனை ஒரு டம்ளரில் ஊற்றி மீதி உள்ள பூஸ்ட்டை தூவிப் பரிமாறவும்.
Thursday, April 14, 2011
Tuesday, March 1, 2011
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
தக்காளி | 1 கிலோ |
நல்லெண்ணெய் | 5 டேபிள் ஸ்பூன் |
கடுகு | 1 டேபிள் ஸ்பூன் |
க.வேப்பிலை | 2 கொத்து |
வெந்தயம் | 1 டீ ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன் |
பெருங்காயம் | 1 டீ ஸ்பூன் |
சிவப்பு மிளகாய் தூள் | 2 டேபிள் ஸ்பூன் |
சாம்பர் பொடி | 1 டேபிள் ஸ்பூன் |
உப்பு | தேவைக்கு |
செய்முறை:
1. 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறிய பின் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளியை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு மைய அரைத்து வைக்கவும்.
3. அடி கனமான வாணலியில் எண்ணையை காய வைத்து, கடுகு போட்டு பொரிந்தவுடன் க.வேப்பிலை, வெந்தயம் ம்ற்றும் பெருங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
4. அதன் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
5. தண்ணீர் நன்கு வ்ற்றி, எண்ணை பிரிந்து வரும்வரை வதக்கவும். அடுப்பை சிம்ல் வைத்துச் செய்யவும்.
6. ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாது.
தயிர் சாதம் மற்றும் ரொட்டி வகைகளுக்கு சூப்பராக இருக்கு.
Monday, February 28, 2011
இஞ்சி – மிளகு டீ
தேவையான பொருட்கள்:
இஞ்சி | 1 இன்ச் |
மிளகு | 10 |
டீ தூள் | 1 டீ ஸ்பூன் |
சர்க்கரை / கருப்பட்டி | 1 டேபிள் ஸ்பூன் |
செய்முறை:
1. இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. மிளகை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
3. பாத்திரத்தில் 11/2 கப் தண்ணீர், நறுக்கிய இஞ்சித் துண்டுகள் மற்றும் மிளகு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் 1 கப்பாக குறையும் வரை அடுப்பை சிம்ல் வைத்து கொதிக்கவிடவும். கண்டிப்பாக பாத்திரத்தை மூடி வைக்கவும்.
4. பிறகு டீ தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
5. வடிகட்டி, கருப்பட்டி சேர்த்து பருகவும்.
இது சளி, இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மிகவும் நல்லது.
Sunday, February 27, 2011
ஒவையார் அருளிய ஆத்திசூடி - 75 - 109
76. நோய்க்கு இடங்கொடேல்.
நோய் வரும் முறையில் நடந்து கொள்ளாதே.
77. பழிப்பன பகரேல்.
பழியுண்டாக்கும் சொற்களைப் பேசாதே.
78. பாம்பொடு பழகேல்.
பாம்பு போன்ற தீயவர்களுடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல்.
குற்றம் உண்டாக்குமாறு பேசாதே.
80. பீடு பெற நில்.
பெருமை உண்டாக்கும் முறையில் நடந்துகொள்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
பிறரால் புகழ்பெறும் சான்றோர்களை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க.
82. பூமி திருத்தியுண்.
நிலத்தை நன்றாகச் செப்பம் செய்து விளைச்சல் உண்டாக்கி உண்க.
83. பெரியாரைத் துணைக்கொள்.
அறிவிற் சிறந்த பெரியவர்களைத் துணையாகக்கொண்டு வாழ்க.
84. பேதமை அகற்று.
அறியாமையை நீக்கிக் கொள்க.
85. பையலோடு இணங்கேல்.
தீயவர்களோடு சேராதே.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
அதிகம் செலவு செய்யாமல் உள்ள பொருளைப் பாதுகாத்து வாழ்க.
87. போர்த்தொழில் புரியேல்.
வேண்டாத சண்டைகளை மேற்கொள்ளாதே.
88. மனந்தடுமாறேல்.
மனக்கலக்கம் அடையாதே.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
பகைவன் வருவதற்கு வழி வகுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல்.
அதிகமாகப் பேசாதே.
91. மீதூண் விரும்பேல்.
அதிகமாகப் பேசாதே.
92. முனை முகத்து நில்லேல்.
கலகம் ஏற்படும் இடத்தில் நிற்காதே.
93. மூர்க்கரோடு இண்ங்கேல்.
மூர்க்கக்குணம் உடையவரோடு பழகாதே.
94. மெல்லின்ல்லாள் தோள்சேர்.
மென்மைகுணம் உடைய நல்ல மனைவி உடன் சேர்ந்து வாழ்வாயாக.
95. மேன்மக்கள் சொற்கேள்.
உயர்ந்தவர் சொற்படி நடந்து கொள்.
96. மைவிழியார் மனை அகல்.
புற அழகுடைய பரத்தையர் வீட்டை நீங்கி வாழ்க.
97. மொழிவது அறமொழி.
சொல்வதைச் சந்தேகம் இல்லாமல் தெளிவாகச்சொல்.
98. மோகத்தை முனி.
வீண் ஆசைகளை வெறுப்பாயாக.
99. வல்லமை பேசேல்.
உன்னுடைய ஆற்றலை நீயே புகழ்ந்து பேசாதே.
100. வாதுமுற் கூறேல்.
வீண் வாதம் செய்யாதே.
101. வித்தை விரும்பு.
செய்யும் தொழிலை விரும்பிச் செய்.
102. வீடுபெற நில்.
பேரின்பம் உண்டாக்கும் முறையில் நடந்துகொள்.
103. உத்தமனாய் இரு.
நல்லவனாக வாழ்க.
104. ஊருடன் கூடி வாழ்.
ஊர் மக்களோடு ஒத்து வாழ்க.
105. வெட்டெனப் பேசேல்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் முறையில் பேசாதே.
106. வேண்டி வினை செயேல்.
வேண்டும் என்றே தீயகாரியங்களைச் செய்யாதே.
107. வைகறைத் துயில் எழு.
பொழுது விடிவதற்கு முன்பே அதிகாலையில் தோக்கதிலிருந்து எழுந்திருப்பாயாக.
108. ஒன்னாரைத் தேறேல்.
பகைவாரை நம்பாதே.
109. ஓரஞ் சொல்லேல்.
வழக்குகளில் ஒருபக்கமாகப் பேசாதே.
முற்றும்.
Thursday, February 17, 2011
ஒவையார் அருளிய ஆத்திசூடி - 51 - 75
51. சேரிடம் அறிந்து சேர்.
நல்ல இனத்தவருடன் நன்றாக தெரிந்து கொண்டு சேர்ந்து வாழ்க.
52. சையெனத் திரியேல்.
பிறர் இகழுமாறு திரியாதே.
53. சொற்சோர்வு படேல்.
பேசும் போது சொற்குற்றம் உண்டாகும் நிலையில் பேசாதே.
54. சோம்பித் திரியேல்.
சோம்பலாகக் காரியம் செய்யாதே.
55. தக்கோன் எனத்திரி.
நல்லவன் எனக் கூறும்படி நடந்து கொள்.
56. தானமது விரும்பு.
வசதியில்லாதவர்க்குத் தானம் கொடுக்க ஆசைப்படு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
நாராயணனுக்குத் தொண்டனாகப் பணிசெய்க.
58. தீவினை அகற்று.
தீமைபயக்கும் செயல்களை நீக்கு.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
துன்பம் உண்டாகும்படி நடந்துகொள்ளாதே.
60. தூக்கி வினைசெய்.
ஆராய்ந்து எல்லாக் காரியங்களையும் செய்க.
61. தெய்வம் இகழேல்.
கடவுளைப் பழிக்காதே.
62. தேசத்தோடு ஒத்து வாழ்.
உலக மக்களோடு ஒத்து வாழ்க.
63. தையல் சொற்கேளேல்.
புறத்தில் அழகுள்ளவர்கள் சொல்லும் சொற்களைக் கேளாதே.
64. தொன்மை மறவேல்.
பழைய பெருமையை மறக்காதே.
65. தோற்பன தொடரேல்.
தோல்வியுண்டாக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்யாதே.
66. நன்மை கடைப்பிடி
நல்லனவற்றைக் கடைபிடித்து நடந்துகொள்.
67. நாடு ஒப்பன செய்.
நாட்டுக்குப் பொருத்தமான செயல்களைச் செய்க.
68. நிலையிற் பிரியேல்.
நல்ல நிலையிலிருந்து தாழ்ந்து விடாதே.
69. நீர் விளையாடேல்.
ஆழமான நீர்னிலைகளில் விளையாடாதே.
70. நுண்மை நுகரேல்.
நுண்மையான நோய்க்கிருமிகள் இருக்கும் உணவுப் பொருட்களை உண்ணாதே.
71. நூல் பல கல்.
அறிவுதரும் நூல்கள் பலவற்றையும் கற்க.
72. நெற்பயிர் விளை.
உணவுக்கு வேண்டிய நெற்பயிர்களை விளைவு செய்க.
73. நேர்பட ஒழுகு.
நேர்மையாக நடந்து கொள்.
74. நைவினை நணுகேல்.
வருத்தம் தரும் செயல்களைச் செய்யாதே.
75. நொய்ய உரையேல்.
பயனில்லதாவற்றைப் பேசாதே.
தொடரும்.....
ஆத்திசூடி 1 முதல் 25 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆத்திசூடி 26 முதல் 50 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
Tuesday, February 15, 2011
ஜோக்ஸ் மெயில்
1) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது?….
---------------------------------------------------
2) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை….
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….
---------------------------------------------------
3) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
---------------------------------------------------
4) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY
---------------------------------------------------
5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்‘ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….
---------------------------------------------------
Labels:
சிரித்தவை,
நகைத்தவை,
படித்தவை,
மெயிலில் வந்தவை,
ஜோக்ஸ்
Monday, February 14, 2011
Friday, February 11, 2011
Thursday, January 27, 2011
ஆத்திசூடி - 25 -50
26. இலவம் பஞ்சில் துயில்.
பஞ்சு மெத்தயில் தூங்கு.
27. வஞ்சகம் பேசேல்.
வஞ்சகமான சொற்களைப் பேசாதே.
28. அழகு அலாதன செயேல்.
பெருமை தாராத செயல்களைச் செய்யாதே.
29. இளமையில் கல்.
இளமைப் பருவத்திலேயே கல்வியைக் கற்க.
30. அரனை மறவேல்.
சிவபெருமானை மறவாமல் வழிபடு.
31. அனந்தல் ஆடேல்.
காலையில் நீண்ட நேரம் தூங்காதே.
32. கடிவது மற.
கடுமையாகப் பேசுவதை மறந்துவிடு.
33. காப்பது விரதம்.
பிறர்க்குத் தீங்கு வராமல் காப்பதே விரதம்.
34. கிழமைப் பட வாழ்.
பிறர்க்கு உரிமை கொண்டு நல்லது செய்து வாழ்க.
35. கீழ்மை அகற்று.
கயமைத்தன்மையை நீக்கு.
36. குணமது கைவிடேல்.
நல்ல குணங்களை கைவிடாதே.
37. கூடிப் பிரியேல்.
பிறரிடம் கூடிப் பழகியபின் பிரியாதே.
38. கெடுப்பது ஒழி.
பிறரைக் கெடுப்பதை விட்டு விடு.
39. கேள்வி முயல்.
நல்லனவற்றைக் கேட்பதில் முயற்சி செய்க.
40. கைவினை கரவேல்.
தெரிந்த தொழிலை மறைக்காதே.
41. கொள்ளை விரும்பேல்.
பிறர் பொருளைத் திருடி வாழ விரும்பாதே.
42. கோதாட் டொழி.
தீமை தரும் விளையாட்டுக்களை நீக்கு.
43. கௌவை அகற்று.
பிறரைப் பற்றிப் பழிசொல்வதை நீக்கு.
44. சக்கரநெறி நில்.
அரசின் ஆணைப் படி நடந்து கொள்.
45. சான்றோர் இனத்திரு.
அறிவில் சிறந்த சான்றோர்களின் இனத்தோடு சேர்ந்திரு.
46. சித்திரம் பேசேல்.
பொய்யானவற்றை மெய் என்று நம்பும்படி பேசாதே.
47. சீர்மை மறவேல்.
சிறந்த பண்புகளை மறவாதே.
48. சுளிக்கச் சொல்லேல்.
கேட்போர் முகம் சுளிக்கும்படி தவறானவற்றைப் பேசாதே.
49. சூது விரும்பேல்.
சூதாடுவதை எக்காலத்துக்கும் விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய்.
செய்யும் வேலைகளை நன்றாகச் செய்.
ஆத்திசூடி 1 முதல் 25 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.
தொடரும்.......
Wednesday, January 26, 2011
Tuesday, January 25, 2011
ஆத்திசூடி
இது ஒவையார் அருளிய ஆத்திசூடி. நமக்கு 10 முதல் 15 ஆத்திசூடி தான் தெரிந்து இருக்கும். ஆனால் ஒவையார் அருளிய ஆத்திசூடி மொத்தம் 109. இந்த ஆத்திசூடிகளை பொருளுடன் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. அறம் செய விரும்பு.
நல்ல தருமத்தைச் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்.
அடக்கிக் கொள்ள வேண்டியது கோபம்.
3. இயல்வது கரவேல்.
கொடுப்பதற்கு முடிந்த பொருளை மறைக்காமல் கொடு.
4. ஈவது விலக்கேல்.
மற்றொருவர்க்குப் பிறர் கொடுப்பதைத் தடுக்காதே.
5. உடையது விளம்பேல்.
உன்னிடத்தில் இருக்கும் உடைமைப்பொருள்களை வெளிப்படையாகப் பிறரிடத்தில் பேசாதே.
6. ஊக்கமது கைவிடேல்.
காரியத்தில் உறுதியான மனவலிமையைக் கைவிடாதே.
7. எண் எழுத்து இகழேல்.
கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் கற்றுக்கொள்.
8. ஏற்பது இகழ்ச்சி.
பிறரிடம் யாசிப்பது பெருமைக்குத் தாழ்வு ஆகும்.
9. ஐயம் இட்டு உண்.
பசித்தவர்க்கு உணவு கொடுத்தபின் உண்பாயாக.
10. ஒப்புரவு ஒழுகு.
உலக மக்கள் நிலைமையறிந்து நடந்து கொள்.
11. ஓதுவது ஒழியேல்.
படிப்பதை எக்காலத்துக்கும் விட்டுவிடாதே.
12. ஒளவியம் பேசேல்.
பொறாமை கொண்டு பேசாதே.
13. அஃகம் சுருக்கேல்.
தானியங்களை அளவு குறைத்துப் பிறர்க்கு விற்காதே.
14. கண்டொன்று சொல்லேல்.
பேசும் போது கண்டபடி பேச்சை மாற்றிப் பேசாதே.
15. ஙப்போல் வளை.
’ங’ போல நீ சிறந்தவனாக இருந்து உன் இனத்தைச் சுற்றி வளைத்துக் காப்பாயாக.
ங என்ற எழுத்து வரிசையில் ஙி,ஙீ...ஙௌ முதலிய எழுத்துக்கள் எங்கும் வருவதில்லை. அங்ஙனம், இங்ஙனம், அங்கு, இங்கு முதலிய சொற்களில் ‘ங’ தனியாகவும் ‘ங்’ என்று புள்ளி பெற்றும் வருகின்றன. ‘ங’ என்ற ஒரே எழுத்திற்காக ஏனைய ‘ஙி’, ‘ஙீ’, ‘ஙு’, ‘ஙூ’ முதலிய எழுத்துக்களை வைத்துக் கொண்டுள்ளோம். ‘ங’ ஏனைய தன் இன எழுத்துக்களைக் காப்பாற்றி வருகின்றது. அதுபோல் நீ சிறந்தவனாக இருந்து உன் இனத்தைச் சுற்றி வளைத்துக் காப்பாயாக.
16. சனி நீராடு.
குளிர்ந்த நீரில் குளிப்பாயாக.
17. ஞயம்பட உரை.
அனைவரிடமும் இனிமையாகப் பேசு.
18. இடம்பட வீடு எடேல்.
பிறர்க்கு இடையூறாகப் பெரிதாக வீட்டைக் கட்டாதே.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
நல்லவரிடத்தில் நட்புக் கொள்.
20. தந்தை தாய்ப் பேண்.
பெற்றோர்களை மதித்துக் காப்பாற்று.
21. நன்றி மறவேல்.
பிறர் செய்த உதவியை மறக்காதே.
22. பருவத்தே பயிர் செய்.
உரிய காலத்தில் காரியங்களைச் செய்.
23. மன்று பறித்து உண்ணேல்.
நீதி மன்றத்தில் கையூட்டுப் பெற்று வாழாதே.
24. இயல்பு அலாதன செயேல்.
நல்லறிவிற்கு மாறான காரியங்களைச் செய்யாதே.
25. அரவம் ஆட்டேல்.
வீண் ஆரவாரமான காரியங்களைச் செய்யாதே.
தொடரும்...............
Subscribe to:
Posts (Atom)