தே. பொருட்கள்
அவல் | 2 கப் |
வெல்லம்
| 1 கப் |
தண்ணீர்
| ½ கப் |
நெய்
| 2 டேபிள்ஸ்பூன் |
முந்திரி
| 10 |
கிஸ்மிஸ்
| 10 |
ஏலக்காய்
| 3 |
துருவிய தேங்காய்
| 3 டேபிள்ஸ்பூன் |
செய்முறை:
1. அவலை சுத்தம் செய்து 5 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.
பின்பு வடிதட்டில் போட்டு 15 நிமிடம் வைத்துவிடவும். இதானால் அவலை தொட்டால் மிருதுவாக இருக்கும் ஆனால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. 15 நிமிடத்திற்கு பின் 3 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
2. அவலில் நீர் வடிவதற்குள் வெல்லத்தை பொடியாக்கி 1/2 கப் நீர் ஊற்றி நன்கு கரையும் வரை அடுப்பில் வைக்கவும். பின்பு வடிகட்டி (நைலான் வடிகட்டி பயன்படுத்த வேண்டாம் ) கொண்டு வடிகட்டி தனியாக வைக்கவும் .
3. கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும்.
4. அவல் நன்கு உலர்ந்த பின் வெல்லப் பாகை சிறுது சிறிதாக ஊற்றி மெதுவாக கலக்கவும்.வருத்த முந்திரி மற்றும் திராட்சை கொண்டு அலங்காரம் செய்யவும்.
இது மிகவும் சத்தான உணவு. இதில் கொழுப்பு சத்தே கிடையாது.உடல் இளைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .
No comments:
Post a Comment