தேவையான பொருட்கள் :
கேரட் | 4 |
தக்காளி | 2 |
துருவிய தேங்காய் | 2 டேபிள் ஸ்பூன் |
வெங்காயம் | 1 |
பூண்டு | 4 பல் |
பச்சை மிளகாய் | 2 |
பிரிஞ்சி இலை | 1 |
எண்ணை | 1 டேபிள் ஸ்பூன் |
உப்பு | தேவைக்கு |
செய்முறை :
1. கேரட்டை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக அல்லது துருவி வைக்கவும்
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. பிரஷர் குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் பூண்டு, வெங்காயம், பிரிஞ்சி இலை, கேரட் துண்டுகள், துருவிய தேங்காய், தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
5. பின்பு 2 கப் நீர் சேர்த்து ஹைல் 2 விசில் வரும் வரை வேக விடவும்.
6. ஆறிய பின் நீரை வடித்து விட்டு காய்களை மிக்ஸ்யில் போட்டு மையாக அரைக்கவும். அதனுடன் வடிதுவைதுள்ள நீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும்வரை சூடு செய்யவும்.
7. பரிமாறும் போது மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.
2 comments:
குடிலுக்கு முதன் முதலில் வந்தவுடனே குளிருக்கு இதமாகச் சூடாகச் சூப் கொடுத்து வரவேற்ற அன்புக்கு எப்படி நன்றி சொல்வது. சூப் அருமை..
குறிஞ்சி நிலமே அழகு. அதிலும் இந்தச் சின்னஞ்சிறு குடில் மிக மிக அருமை.. எப்படி இத்தனை நாள் நான் பார்க்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை. பசிக்கும் போதெல்லாம் சாப்பிட வரும் குடில் இனிமேல் இதுதான்.
காட்டியதற்கு நன்றி முருகா..(குறிஞ்சிக் கடவுள்)
எளிமையான செய்முறை.. இங்கே நல்ல குளிர் காலம்... இதமாக உங்க சூப் செஞ்சு சாப்பிட்டுற வேண்டியது தான்.
பகிர்வுக்கு நன்றி..... :)
Post a Comment