Wednesday, January 12, 2011

சென்னை புத்தகக் காட்சி - 2011


சென்னையில் புத்தக கண்காட்சி ஆண்டு தோறும் நடை பெறுகின்றது. இந்த வருடம் ஜனவரி 4 முதல் 17 வரை நடை பெறுகின்றது.மேலும் மாலை நேரங்களில் சான்றோர்களின் உரைகளும் நடை பெறுகின்றன.   சென்ற ஞாயிறு அன்று நானும் சென்று இருந்தேன். அதை பற்றி சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். கிட்டத்தட்ட 463 புத்தக கடைகள் இருந்தன. 3 நுழைவு வாயில்கள் இருந்தன. இன்று புத்தகம் வாசிப்பது என்பது வெகுவாக குறைந்து விட்ட ஒன்று என நான் நினைத்தேன். ஆனால் அங்கு வந்த கூட்டத்தைபார்க்கும் பொழுது நாம் நினைத்தது தவறோ என எண்ணத் தோன்றுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் வந்து இருந்தனர். பொழுது போக்கிற்காக வந்துள்ளனர் என்று நினைக்க முடியவில்லை. ஏன் என்றால் அனைவரும் அவர்களுக்கான் புத்தகங்களில் குறைந்தது ஒன்றையாவது வாங்கத்தான் செய்தனர். அதைப் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும்  இருந்தது.

புத்தகம் வாசிக்கும் போது மட்டுமே நாம் அதோடு இணைத்து அந்த காலத்துக்கே சென்று விடுவோம். வரலாற்று நாவல்கள் வாசிக்கும் போது பிந்தைய காலத்துக்கே நம் கற்பனை குதிரை சென்று விடும். படமாக பார்க்கும் பொழுது கிடைக்காத ஒரு அனுபவம் படிக்கும் பொழுது கிடைக்கும். அதனால் அனைவரும் வாசிக்கப் பழகுங்கள்.

இன்று நாம் விஞ்ஞான உலகத்தில் எத்தனையோ முன்னேற்றம் வந்திருந்தாலும் நிறைய நல்ல விசயங்களை தொலைத்துவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் அவர்கள் கூறியது "யாரிடமாவது நீ என்ன படம் பார்த்தாய் அல்லது எங்கே சென்றாய் இன்று கேட்டால் உடனே பதில் வந்து விடும். ஆனால் சமீபத்தில் வாசித்த புத்தகம் எது இன்று கேட்டால் சொல்ல முடியாது". எவ்வளவு அழகான உண்மை. அனைவர் வீடுகளிலும் இன்று ஷோ கேஸ், டிவி மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்தும்  இருக்கும். ஆனால் லைப்ரரி இருப்பது மிகவும் அரிது. போன தலை முறையினர் வாசித்த அளவு இந்த தலை முறையினர் வாசிப்பது இல்லை. காரணம் பெற்றவர்கள் தான், ஆம் இன்று அலுவலக வேலை மற்றும் டிவி க்குள் முடங்கி விடுகிறோம்.

இதுபோன்ற கண்காட்சி மூலமாக மாற்றம் கண்டிப்பாக வந்தே தீரும்.

9 comments:

Mahi said...

குறிஞ்சி,ஒரே நாள்ல 4-5 போஸ்ட் போட்டு கலக்கறீங்க போங்க! :) :)

வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது என்பது கசப்பான உண்மைதான்.என்னதான் லேப்டாப்ல படித்தாலும்,புத்தகத்தைக் கையில் வைத்துப் படிக்கும் satisfaction எனக்கு வராதுங்க. :)

Anonymous said...

romba miss panrean...
Reva

Krishnaveni said...

nice post, best wishes for your new blog

ஸாதிகா said...

//"யாரிடமாவது நீ என்ன படம் பார்த்தாய் அல்லது எங்கே சென்றாய் இன்று கேட்டால் உடனே பதில் வந்து விடும். ஆனால் சமீபத்தில் வாசித்த புத்தகம் எது இன்று கேட்டால் சொல்ல முடியாது".//
//போன தலை முறையினர் வாசித்த அளவு இந்த தலை முறையினர் வாசிப்பது இல்லை. காரணம் பெற்றவர்கள் தான், ஆம் இன்று அலுவலக வேலை மற்றும் டிவி க்குள் முடங்கி விடுகிறோம்.// சரியாக சொன்னீர்கள்.இத்தகைய கண்காட்சிகளால் விரைவில் நல்லதொரு ஆரோக்கியமான மாற்றம் நிகழும்.

Asiya Omar said...

நல்ல விளக்கமும் பகிர்வும்,அருமை.

வெங்கட் நாகராஜ் said...

வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்ட இந்நாளில் இது போன்ற புத்தகக் கண்காட்சி அவசியமான ஒன்று. இதன் மூலம் குறைந்தபட்சம் சிலராவது புத்தகங்கள் வாசிப்பினை தொடர்ந்தால், துவக்கினால் நல்லது தானே.

பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

போளூர் தயாநிதி said...

இன்றைய நிலையில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக சொல்லப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சி நடக்கும் இடங்களில் வரும் கூட்டம் இதை பொய்யாக்குகிறது . இன்றைய இளைய சமுகம் நல்ல பாதையினை நோக்கி செல்கிறார்கள் என்பது எமது எண்ணம் . வாழ்க மக்கள் வாழ்க இளைய சமூகம் .இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

கவி அழகன் said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

Post a Comment