Thursday, January 27, 2011

ஆத்திசூடி - 25 -50

26. இலவம் பஞ்சில் துயில்.
    பஞ்சு மெத்தயில் தூங்கு.

27. வஞ்சகம் பேசேல்.
    வஞ்சகமான சொற்களைப் பேசாதே.

28. அழகு அலாதன செயேல்.
    பெருமை தாராத செயல்களைச் செய்யாதே.

29. இளமையில் கல்.
    இளமைப் பருவத்திலேயே கல்வியைக் கற்க.

30. அரனை மறவேல்.
    சிவபெருமானை மறவாமல் வழிபடு.

31. அனந்தல் ஆடேல்.
    காலையில் நீண்ட நேரம் தூங்காதே.

32. கடிவது மற.
    கடுமையாகப் பேசுவதை மறந்துவிடு.

33. காப்பது விரதம்.
    பிறர்க்குத் தீங்கு வராமல் காப்பதே விரதம்.

34. கிழமைப் பட வாழ்.
    பிறர்க்கு உரிமை கொண்டு நல்லது செய்து வாழ்க.

35. கீழ்மை அகற்று.
    கயமைத்தன்மையை நீக்கு.

36. குணமது கைவிடேல்.
    நல்ல குணங்களை கைவிடாதே.

37. கூடிப் பிரியேல்.
    பிறரிடம் கூடிப் பழகியபின் பிரியாதே.

38. கெடுப்பது ஒழி.
    பிறரைக் கெடுப்பதை விட்டு விடு.

39. கேள்வி முயல்.
    நல்லனவற்றைக் கேட்பதில் முயற்சி செய்க.

40. கைவினை கரவேல்.
    தெரிந்த தொழிலை மறைக்காதே.

41. கொள்ளை விரும்பேல்.
    பிறர் பொருளைத் திருடி வாழ விரும்பாதே.

42. கோதாட் டொழி.
    தீமை தரும் விளையாட்டுக்களை நீக்கு.

43. கௌவை அகற்று.
    பிறரைப் பற்றிப் பழிசொல்வதை நீக்கு.

44. சக்கரநெறி நில்.
    அரசின் ஆணைப் படி நடந்து கொள்.

45. சான்றோர் இனத்திரு.
    அறிவில் சிறந்த சான்றோர்களின் இனத்தோடு சேர்ந்திரு.

46. சித்திரம் பேசேல்.
    பொய்யானவற்றை மெய் என்று நம்பும்படி பேசாதே.

47. சீர்மை மறவேல்.
    சிறந்த பண்புகளை மறவாதே.

48. சுளிக்கச் சொல்லேல்.
    கேட்போர் முகம் சுளிக்கும்படி தவறானவற்றைப் பேசாதே.

49. சூது விரும்பேல்.
    சூதாடுவதை எக்காலத்துக்கும் விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்.
    செய்யும் வேலைகளை நன்றாகச் செய்.

ஆத்திசூடி 1 முதல் 25 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.

   
                                      தொடரும்.......

7 comments:

G.M Balasubramaniam said...

கோலங்கள் வாழ்த்துக்கள் என உங்கள் கை வண்ணம் காட்டியதோடு ஆத்திசூடி பாடம் எடுத்தும் அசத்துகிறீர்கள்.இன்னும் அரிச்சுவடி, ஆத்திசூடி போன்றவை நம்மால் கற்று உணரவேண்டிய நிலையில்தான் நாமிருக்கிறோம். தொடருங்கள் . வழ்த்துக்கள் .

ஞாஞளஙலாழன் said...

அருமையா இருக்கு. தொடருங்கள் நண்பரே!

மனோ சாமிநாதன் said...

மறந்து போன நன்மொழிகளை இங்கே மீண்டும் நினைவு கூர்ந்ததற்கு இனிய நன்றி!

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...

அருமையா இருக்கு. தொடருங்கள் நண்பரே

நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com

போளூர் தயாநிதி said...

ஆத்திசூடி பாடம் எடுத்தும் அசத்துகிறீர்கள்.இன்னும் அரிச்சுவடி, ஆத்திசூடி போன்றவை நம்மால் கற்று உணரவேண்டிய நிலையில்தான் நாமிருக்கிறோம். தொடருங்கள் . வழ்த்துக்கள் .

Thenammai Lakshmanan said...

அருமையான ஆத்திச்சூடி.. பகிர்வுக்கு நன்றி. குறிஞ்சி

Kurinji said...

அனைவருக்கும் நன்றி..

Post a Comment